முகப்பு
செய்திகள்

விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டைக் கொண்டாடிய நயன்தாரா

நயன்தாராவுடன் புத்தாண்டைக் கொண்டாடிய புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

பிரபல நடிகை நயன்தாராவுடன் புத்தாண்டைக் கொண்டாடிய புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். தன்னுடைய வருங்காலக் குழந்தைகளின் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகள் எனக் கடந்த வருடம் அன்னையர் தினத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஓணம் பண்டியைக் கொண்டாட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்றார்கள். பிறகு கேரளாவிலிருந்து நேராக கோவா சென்று விடுமுறையைக் கழித்தார்கள். 

இந்நிலையில் இன்ஸ்டகிராம் தளத்தில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன், அடுத்ததாக, காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதற்கான அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். தயாரிப்பு - லலித் குமார்.

முழு கட்டுரையைப் படிக்க →