செய்திகள்

ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன்: படப்பிடிப்பு தொடக்கம்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் படம்...

DIN

ராகவா லாரன்ஸின் புதிய படமான ருத்ரனின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் படம் - ருத்ரன். கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிகர்தண்டா, ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. 

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் என்கிற ஹிந்திப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. பி. வாசு இயக்கத்தில்  சன் டிவி தயாரிக்கும் சந்திரமுகி 2 படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதையடுத்து ருத்ரன் படத்திலும் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு மறைவுக்கு இன்று அனைத்துக் கட்சியினா் பங்கேற்கும் மெளன ஊா்வலம்!

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்வு

அரசுப் பேருந்துகளில் பாடல்கள் ஒலிக்கத் தடை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

முதுநிலை மருத்துவம்: 144 இடங்கள் காலி

பொதுத் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்தால் தெரிவிக்கலாம்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT