முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான்: படப்பிடிப்பு நிறைவு!

சிவகார்த்திகேயன் - ஆர். ரவிகுமார் கூட்டணியில் உருவாகும் அயலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

சிவகார்த்திகேயன் - ஆர். ரவிகுமார் கூட்டணியில் உருவாகும் அயலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவிகுமாரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அயலான் என்று பெயரிடப்பட்டுள்ள கதாநாயகி - ரகுல் ப்ரீத் சிங். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

இந்நிலையில் அயலான் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இத்தகவலை இயக்குநர் ஆர். ரவிகுமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

கோடை விடுமுறையின்போது டாக்டர் படம் வெளியாகிறது. இதன்பிறகு டிசம்பரில் அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →