முகப்பு
செய்திகள்

மாஸ்டர் படப் பாடல்கள், விஜய் நடனத்துக்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டு!

வாத்தி ரெய்டு, உடனடியாக என்னுடைய செல்போன் காலர் டியூனாக இருக்க வேண்டியது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

மாஸ்டர் படத்தின் பாடல்களையும் விஜய் நடனத்தையும் பாராட்டி இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். 

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. மாஸ்டர் படம் ஜனவரி 29 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. கடந்த 13-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட்ட மாஸ்டர் படம், அடுத்த 16 நாள்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தைப் பார்த்துள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் எழுதியதாவது:

வாத்தி ரெய்டு, உடனடியாக என்னுடைய செல்போன் காலர் டியூனாக இருக்க வேண்டியது. வேற மாதிரி அனிருத். வாத்தி கம்மிங் அதுக்கும் மேலே. விஜய்யும் அல்லு அர்ஜூனும் ஒன்றாக நடனமாடினால் அதன் தரத்தை எட்டுவது கடினமாக இருக்கும் என்று எழுதினார்.

கிரிக்கெட் வீரர் ரஹானே, சூரரைப் போற்று படத்தைப் பாராட்டி இன்ஸ்டகிராமில் எழுதியுள்ளார். வேறு ஏதாவது படத்தைப் பரிந்துரை செய்ய முடியுமா அஸ்வினிடம் அவர் கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்த அஸ்வின், மாஸ்டர் பார்க்கலாமா ரஹானே எனக் கேட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →