முகப்பு
செய்திகள்

பா. இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை: டிரெய்லர் வெளியீடு

பா. இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

Updated On : 20 ஜூலை, 2021 at 1:37 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:07 AM


பா. இரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். 

ஆர்யா நடிக்கும் படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள இப்படத்துக்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - முரளி. சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவுபெற்றது.

Advertisement

தமிழ்நாட்டில் திரையரங்குகள் எப்போது மீண்டும் இயங்கும் என்று தெளிவாகத் தெரியாத நிலை மற்றும் கரோனா அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. ஜூலை 22 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.