செய்திகள்

அசுரன் தெலுங்கு பட ரீமேக் டிரெய்லர் வெளியீடு

அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூலை 20 அன்று வெளியாகும் நரப்பா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

DIN

அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூலை 20 அன்று வெளியாகும் நரப்பா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்தது. இப்படத்தை தாணு தயாரித்தார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்தார். 2019 அக்டோபர் 4 அன்று வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 

அசுரன் படம் தெலுங்கில் நரப்பா என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தெலுங்கு அசுரனை தாணுவும் சுரேஷ் பாபுவும் தயாரித்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கியுள்ளார். தனுஷ் வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார். இது அவருடைய 74-வது படம். தமிழில் மஞ்சு வாரியர் நடித்த வேடத்துக்கு தமிழ் நடிகை ப்ரியாமணி தேர்வு செய்யப்பட்டார்.

அசுரன் தெலுங்கு ரீமேக்கான நரப்பா, மே 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு கரோனா ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

நரப்பா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூலை 20 அன்று வெளியாகவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி செல்லவிருக்கும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சுநேத்ரா பவாருக்கு துணை முதல்வர் பதவி! சரத் பவார் சொல்வது என்ன?

தனியறையில் அத்துமீறிய புகைப்படக் கலைஞர்... கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அதிகாரம் யாரிடம்? 3-வது இடத்தில் அமெரிக்கா! எலான் மஸ்க் கருத்தால் குழப்பம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரவைத் தலைவராக சுநேத்ரா பவார் தேர்வு!

SCROLL FOR NEXT