ஓடிடியால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்: நடிகை அமலா பால்
ஓடிடி வரவால் புதிய கதைகளைப் படமாக்குவதில் இயக்குநர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகப் பிரபல நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
ஓடிடி வரவால் புதிய கதைகளைப் படமாக்குவதில் இயக்குநர்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகப் பிரபல நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
ஓடிடியில் வெளியாகியுள்ள தெலுங்கு இணையத் தொடர் ஒன்றில் காவலராக நடித்துள்ளார் நடிகை அமலா பால். இதையடுத்து ஓடிடியின் வரவால் ஏற்பட்டுள்ள நன்மைகள் பற்றி அவர் கூறியதாவது:
ஓடிடியின் சிறப்பம்சம், வித்தியாசமான கதைகளை நமக்குத் தருகிறது. 2020 முதல் நான் பார்க்கும் கதைகள் வேறுவிதமாக உள்ளன. எல்லோருக்கும் புதிய முயற்சியை செய்து பார்ப்பதில் ஆர்வம் வந்துள்ளது. ஓடிடி, எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகளை அளிக்கிறது. திரையரங்குகளில் பாப்கார்னைச் சாப்பிட்டுக்கொண்டே படம் பார்க்கும் அனுபவத்தை இழந்தாலும் தற்போதைய நிலையில் ஓடிடி சிறந்த மாற்றாக உள்ளது. விசிஆர், சிடி, டிவிடி, ஹோம் தியேட்டர், திரையரங்குகள், ஓடிடி என அனைத்தையும் பார்த்த தலைமுறையில் நானும் ஒருவராக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.