செய்திகள்

நீயே ஒளி: சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மாஜாவில் வெளியான பாடல் (விடியோ)

எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு அடுத்ததாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மாஜா தளத்தில்

DIN

எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு அடுத்ததாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மாஜா தளத்தில் நீயே ஒளி என்கிற பாடல் வெளியாகியுள்ளது. 

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த என்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் விடியோ மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதினார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளத்தில் இப்பாடல் வெளியானது. என்ஜாய் எஞ்சாமிக்கு ரசிகர்கள் மகத்தான வரவேற்பு அளித்தார்கள். யூடியூப் தளத்தில் இதுவரை 290 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நீயே ஒளி என்கிற புதிய பாடலை வெளியிட்டுள்ளது மாஜா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலை ஷான் வின்சென்ட் டி பால், நாவ்ஸ் - 47, சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளார்கள். பாடலின் விடியோவை எஸ்.வி.டி.பி மற்றும் கலைச்செல்வன் இயக்கியுள்ளார்கள். இந்தப் பாடல் ஆர்யா நடிப்பில் பா. இரஞ்சித் இயக்கி விரைவில் ஓடிடியில் வெளியாகும் சார்பட்டா பரம்பரை படத்திலும் தீம் பாடலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: மோதலில் 7 போலீஸாா், 6 பயங்கரவாதிகள் பலி!

வேன்-பைக் மோதல்: வியாபாரி மரணம்

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

ஹூண்டாய் விற்பனை 10% அதிகரிப்பு

இறுதிச் சுற்றில் வலேன்டின்! ஜோகோவிச் அதிா்ச்சித் தோல்வி!

SCROLL FOR NEXT