முகப்பு
செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் படத்தில் களமிறங்கும் 'பிக்பாஸ்' நடிகர்

'தடம்' இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தவகல் வெளியாகியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
உதயநிதி ஸ்டாலின்
பகிர்:


'தடம்' இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தவகல் வெளியாகியுள்ளது. 

தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  'தடம்'  படத்துக்கு விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்புக்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கும் படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, நடிகர் கலையரசன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் இந்த படத்தில் நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதியுடன் இருக்கும் அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது. 

ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த படத்துக்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குநர் சரண் இயக்கத்தில் 'மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் ஹீரோவாக ஆரவ் நடித்திருந்தார். இதனையடுத்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'ராஜ பீமா' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →