செய்திகள்

விஐபி 2 படத்துக்கு இசையமைக்க மூன்று நாள்கள் தான் வழங்கப்பட்டன: ஷான் ரோல்டன்

வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் இசையமைப்புப் பணிகளுக்கு மூன்று நாள்கள் தான் வழங்கப்பட்டன என

DIN

வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் இசையமைப்புப் பணிகளுக்கு மூன்று நாள்கள் தான் வழங்கப்பட்டன என ஷான் ரோல்டன் கூறியுள்ளார்.

2014-ல் இசையமைப்பாளராக அறிமுகமான ஷான் ரோல்டன், தனுஷ் நடித்த பா. பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றினார். 

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி 2 படம் பற்றி ட்விட்டரில் ஷான் ரோல்டன் கூறியதாவது:

விஐபி 2 படம் பற்றி சில தகவல்கள். மொத்தப் படத்துக்கும் இசையமைக்க எனக்கு மூன்று நாள்கள் தான் வழங்கப்பட்டன. எந்த வரையறையிலும் காரணமற்ற காலக்கெடு இது. தனுஷ் சார் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். ஆனால் சில இதயமில்லாத தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய அறிவிப்பு உங்களுடன் தொடர்பில்லாதது என்றார். இதன்பிறகு அடுத்த  ட்வீட்டில் அவர் தெரிவித்ததாவது: அன்பான தனுஷ் ரசிகர்களுக்கு, தனுஷுடன் இணைந்து அவருடைய கனவுப் படங்களில் தொடர்ந்து பணிபுரிவேன். உற்சாகம் அளிக்கக்கூடிய இசையை வழங்குவேன். அதற்குரிய தகுந்த நேரம் வரட்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமுளி அருகே தம்பதி மீது தாக்குதல்: கேரளத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்கு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேரூராட்சித் தலைவா் அச்சுறுத்துவதாகக் கூறி குடும்பத்துடன் இளநீா் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வீட்டு மாடியில் உண்ணாவிரதம் இருந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் கைது

SCROLL FOR NEXT