செய்திகள்

மணி ஹெய்ஸ்ட் டிரெய்லர் எப்போது? விடியோ வெளியீடு

மணி ஹெய்ஸ்ட் இணையத் தொடர் 5-ம் சீசனின் டிரெய்லர் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.

DIN


மணி ஹெய்ஸ்ட் இணையத் தொடர் 5-ம் சீசனின் டிரெய்லர் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.

இந்த அறிவிப்பை இணையத் தொடரின் குழு விடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

மணி ஹெய்ஸ்டின் முதலிரண்டு பாகங்கள் 2017-இல் வெளியாகின. அடுத்த இரண்டு பாகங்கள் 2019-2020-இல் வெளியாகின. இதன் கதாபாத்திரங்கள் இந்தியா உள்பட உலகளவில் மிகவும் பிரபலமாகின. 

குறிப்பாக கடந்தாண்டு பொது முடக்கத்தின்போது இந்த இணையத் தொடர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தது. இதனால், மணி ஹெய்ஸ்டின் முடிவுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

5-ம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. 5-வது பாகம் இரண்டு பகுதிகளாக செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் வெளியாகும் என இணையத் தொடரின் குழு கடந்த மே மாதம் வெளியிட்டது.

இந்த நிலையில், 5-ம் பாகத்தின் முதல் பகுதி டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ளதாக இணையத் தொடர் குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT