செய்திகள்

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் வேடம் இதுவா ?

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராயின் வேடம் குறித்து இந்தப் படத்தில் நடிக்கும் ராகவன் பகிர்ந்துள்ளார்.  

DIN

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராயின் வேடம் குறித்து இந்தப் படத்தில் நடிக்கும் ராகவன் பகிர்ந்துள்ளார். 

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை, மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

இந்தப் படத்தில் யார் யார் என்னென்ன வேடங்களில் நடிக்கிறார்கள் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பொன்னியின் செல்வனைப் படித்த ஒரு சிலர் இந்த வேடத்தில் இவர்கள் நடிக்கிறார்கள் என யூகத்தின் பேரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதைக் காணமுடிந்தது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் 'சேதுபதி', 'மாரி 2', 'றெக்க' போன்ற படங்களில் நடித்த சிறுவன் ராகவன், இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் ராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜஸ்வர்யா ராயுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் , பொன்னியின் செல்வனின் நந்தினி தேவி, பாண்டிய இளவரசன் எனப் பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் நந்தினி தேவியின் வேடத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT