செய்திகள்

விஷாலுக்கு வில்லனாக நடிக்க வேண்டுமா ? - நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!

நடிகர் விஷாலின் புதிய படத்திற்காக நடிகர்கள் தேர்வு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

நடிகர் விஷாலின் புதிய படத்திற்காக நடிகர்கள் தேர்வு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆர்யாவுடன் இணைந்து நடிகர் விஷால் நடித்துள்ள 'எனிமி' படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்க, ஆனந்த் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இதனையடுத்து தற்போது இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஷால் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் தயாரிப்பில் விஷால் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. விஷாலின் 32வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் தேவை என்ற விளம்பரம் வெளியாகியுள்ளது. 

அதில் ஆண்கள் - 25 வயது முதல்  30 வயது வரை, உயரம் - 5.8 முதல் 6.2 வரை வெள்ளை நிறத்தில் வில்லன் தோற்றத்தில் இருக்க வேண்டும். ஆண்கள் - வயது 25 முதல் 45 வரை, மாநிறத்தில் ரௌடி தோற்றத்தில் இருக்க வேண்டும். சிறுவன் - 6 முதல் 7 வயது வரை மாநிறமாக ஒல்லியான தோற்றத்தில், சராசரியான உயரத்தில் இருக்க வேண்டும்.

இளம் பெண் - 16 வயது முதல் 20 வயது வரை மாநிறமாக ஒல்லியான தோற்றத்தில் சராசரி உயரத்தில் இருக்க வேண்டும் . தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகர்களுக்கு முன்னுரைமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  

விருப்பமுள்ளவர்கள் வருகிற 15.8.2021 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டுரை இணைப்பை சுடுக்கி விண்ணப்பிக்கலாம் . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

குரூப் 2, 2ஏ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு!

SCROLL FOR NEXT