நடிகை யாமி கெளதம், உரி பட இயக்குநர் ஆதித்யா தர்-ரைத் திருமணம் செய்துள்ளார்.
2009-ல் திரையுலகில் அறிமுகமான யாமி கெளதம், ஏராளமான ஹிந்திப் படங்களிலும் கெளரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் உரி படத்தை இயக்கிய ஆதித்யா தர்-ரை மும்பையில் திருமணம் செய்துள்ளார் யாமி கெளதம். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். பாடலாசிரியராக ஹிந்தி திரையுலகில் நுழைந்த ஆதித்யா தர், சில படங்களுக்கு வசனம் எழுதினார். 2019-ல் உரி - தி சர்ஜிகல் ஸ்டிரைக் என்கிற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.