செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு பி.சி. ஸ்ரீராம் பாராட்டு

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்.

DIN

முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்.

மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுவுக்குப் புதிய உறுப்பினா்களையும், துணைத் தலைவரையும் தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, முதல்வா் தலைமையில் செயல்படும் அக்குழுவுக்கு பேராசிரியா் ஜெ.ஜெயரஞ்சன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். பொருளாதார அளவியல் துறை பேராசிரியா் ராம சீனுவாசன், மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா உள்பட 9 போ் அக்குழுவில் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

இந்நிலையில் திறமையான நபர்களுக்குப் பதவிகள் அளிக்கப்படுவது தொடர்பாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ட்விட்டரில் கூறியதாவது:

பல்வேறு பதவிகளுக்குத் திறமையான நபர்களை முதல்வர் ஸ்டாலின் நியமிப்பது ஆரோக்கியமான போக்கு. ஒருவழியாக, புதிய காற்று வீசுகிறது. நன்றி சார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

வெள்ளத்தால் சேதமடைந்த பாலம்! சீரமைப்புப் பணிகள் தீவிரம்! | Uttarakhand

நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல: தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

“பிற மாநிலத்தவர்கள் வாக்குரிமை பெறுவதில் என்ன தவறு?” டிடிவி தினகரன் பேட்டி

SCROLL FOR NEXT