செய்திகள்

தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணைந்த தனுஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

DIN

தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குந சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

1999-ல் டாலர் டிரீம்ஸ் என்கிற படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் சேகர் கம்முலா. அந்தப் படத்துக்காக அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார். ஆனந்த், கோதாவரி, லீடர், ஃபிடா போன்ற படங்களை அவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகவுள்ளது. நாராயண் தாஸ் கே. நரங், புஷ்குர் ராம் மோகன் ராவ் தயாரிக்கிறார்கள். 

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியாகிறது. அத்ராங்கி ரே என்கிற ஹிந்திப் படத்தில் நடித்து வரும் தனுஷ், இயக்குநர் கார்த்திக் நரேன் படத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். தாணு தயாரிப்பில் செல்வராகவன் படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்களின் அடுத்த படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆகிய படங்களை இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர்களான ருஸோ பிரதர்ஸ் (அந்தோனி ருஸோ, ஜோசப் ருஸோ) அடுத்ததாக தி கிரே மேன் என்கிற ஆங்கிலப் படத்தை இயக்கி வருகிறார்கள். தனுஷ் நடிப்பில் உருவாகும் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT