முகப்பு
செய்திகள்

கிரிக்கெட் வீரரைத் திருமணம் செய்கிறார் ஷங்கர் மகள்

பிரபல இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யவுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
படம்: ட்விட்டர்
பகிர்:

பிரபல இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யவுள்ளார். 

இந்தியாவின் முன்னணி இயக்குநராக உள்ளார் ஷங்கர். ராம் சரண் படம், அந்நியன் ஹிந்தி ரீமேக், இந்தியன் 2 எனத் தற்போது மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மருத்துவரான ஐஸ்வர்யா, புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித்தைத் (29) திருமணம் செய்யவுள்ளார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன் ரோஹித். 

ஐஸ்வர்யா - ரோஹித் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் இத்திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.  

முழு கட்டுரையைப் படிக்க →