முகப்பு
செய்திகள்

ஷாருக் கான் ஜோடியாகிறாரா நயன்தாரா?

​பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:


பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கவுள்ள படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் அட்லி மெர்சல், பிகில் படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக் கானை இயக்கவுள்ளதாக ஊடகங்களில் நீண்ட நாள்களாக தகவல்கள் உலவி வருகின்றன. இதற்கான தயாரிப்பு பணிகளை படக் குழு ஏற்கெனவே தொடங்கவிட்டதாகவும், இந்தாண்டு இறுதியில் படப்படிப்பு தொடங்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வரிசையில் சமீபத்திய தகவலாக தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நயன்தாரா, அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ஷாருக் கானுக்கு இணையாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பட்சத்தில் பாலிவுட்டில் நயன்தாராவுக்கு இது முதல் படம்.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நயன்தாரா ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. மேலும் இந்த தகவலை உறுதி செய்யும்படியும் நயன்தாரா ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →