விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
செய்திகள்

யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்பட முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து படம் பேசுகிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருந்த இப்படத்தின் டீசர் இம்மாதம் ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இப்படத்தின் 'முருகா' என்ற முதல் பாடலை  மார்ச் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT