முகப்பு
செய்திகள்

விஜய் பட பூஜையில் கலந்து கொள்ளாதது ஏன்?: நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்

என் மனம் அங்குதான் உள்ளது. வாழ்த்துகள். படப்பிடிப்பில் இணைய ஆர்வமாக உள்ளேன் என்றார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:54 PM
பகிர்:

படப்பிடிப்பில் பங்கேற்பதால் விஜய் பட பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை என நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத்.

இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 

விஜய் 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாததற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. அவர் கூறியதாவது:

படப்பிடிப்பில் உள்ளதால் தளபதி 65 படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால் என் மனம் அங்குதான் உள்ளது. வாழ்த்துகள். படப்பிடிப்பில் இணைய ஆர்வமாக உள்ளேன் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →