முகப்பு
செய்திகள்

இயக்குநர் வசந்தபாலனுக்கு கரோனா பாதிப்பு

நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம்  யானை பலம் கூடி வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
படம் - facebook.com/vasanta.balan
பகிர்:

பிரபல இயக்குநர் வசந்தபாலன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ், அபர்னதி நடிப்பில் ஜெயில் என்கிற படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன். ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். ஜெயில் படம் விரைவில் வெளிவரவுள்ளது. தனது விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் வசந்தபாலன். ஃபேஸ்புக்கில் இதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:

அன்புள்ள நண்பர்களுக்கு! நான் கொரோனோ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆதலால் பலருடைய தொலைபேசி அழைப்பை எடுக்க இயலமுடியவில்லை. என் மீது பேரன்பு கொண்ட நண்பர்கள், மருத்துவர்கள், உறவினர்கள் சூழ இருக்கிறேன் என்பதே மனதிற்குள் ஆயிரம்  யானை பலம் கூடி வருகிறது. ஈராறு கால்கொண்டெழும் புரவியாய் மீண்டும் எழுந்து வருவேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.