முகப்பு
செய்திகள்

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் பாடல் வெளியீடு ஒத்திவைப்பு

நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம் என்று கூறியுள்ளார். 

Updated On : 11 மே, 2021 at 4:11 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:42 AM

மே 14 அன்று வெளியாவதாக இருந்த மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

திரைப்படப் படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதித்த பிறகு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்கிற படத்தில் நடித்தார் சிம்பு. அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். சிம்புவின் பிறந்த நாளன்று மாநாடு படத்தின் டீசர் வெளியானது.

Advertisement

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான நோன்பு காலம் முடிந்து ஈகைத் திருநாள் எனும் ரமலான் மே 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மாநாடு படத்தின் முதல் பாடலை ரமலான் தினத்தன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வெங்கட் பிரபுவின் தயார் உடல்நலக்குறைவால் காலமானதால் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது:

நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரமலான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த மாநாடு படத்தின் முதல் பாடல், இயக்குநர் வெங்கட் பிரபுவின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொரு தேதியில் முதல் பாடலை வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.