முகப்பு
செய்திகள்

ஓடிடியில் நேரடியாக வெளியானது சல்மான் கானின் ராதே படம்

ஜீ5 ஓடிடி தளத்தின் ஒரு வருட சந்தாவாக ரூ. 499 செலுத்தினால் ராதே படத்தை...

Updated On : 13 மே 2021, 1:09 pm IST
பகிர்:

சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் - ராதே.

சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள். 

10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3-வது முறையாக இணைந்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

ராதே படம் கடந்த வருடம் மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 13) இப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது.

இன்று இந்தியாவுக்கு வெளியே திரையரங்குகளில் வெளியாகும் ராதே படம் ஜீ பிளெக்ஸ் ஓடிடியிலும் நேரடியாக வெளியாகியுள்ளது. இதற்கென தனியாகக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம். ஜீ5 ஓடிடி தளத்தின் ஒரு வருட சந்தாவாக ரூ. 499 செலுத்தினால் ராதே படத்தை இலவசமாக் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.