முகப்பு
செய்திகள்

கரோனாவுக்குப் பலியான அருண்ராஜா காமராஜ் மனைவி: நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி ஸ்டாலின்

அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு...

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
படங்கள் - twitter.com/Udhaystalin
பகிர்:

கரோனாவுக்குப் பலியான இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி கவனம் பெற்ற அருண்ராஜா காமராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சில படங்களிலும் அவர் நடித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வரும் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இயக்கி வருகிறார்.

அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து கரோனாவால் இறந்த சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதுபற்றி ட்விட்டரில் அவர் எழுதியதாவது:

நேர்த்தியான இயக்குநர் - நுட்பமான திரைக்கலைஞர் சகோதரர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.