முகப்பு
செய்திகள்

மாநகராட்சிப் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் சூரி (விடியோ)

இன்னைக்கு நானும் என் மனைவியும் பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசுப் பள்ளியில் கரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

நடிகர் சூரி, கரோனா தடுப்பூசியை மதுரையில் செலுத்திக்கொண்டுள்ளார். 

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

திரைத்துறை பிரபலங்கள் பலரும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்கள். எனினும் பிரபல நகைச்சுவை நடிகரான சூரி, மதுரையில் உள்ள தடுப்பூசி முகாமுக்குச் சென்று கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

இன்னைக்கு நானும் என் மனைவியும் பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசுப் பள்ளியில் கரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்தப் பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும்போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →