முகப்பு
செய்திகள்

தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரணிதா

கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படங்களிலும்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
படங்கள் - twitter.com/RIAZtheboss
பகிர்:

நடிகை பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூவைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

2011-ல் உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரணிதா. கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படங்களிலும் நடித்துள்ளார். ஹங்கமா 2, புஜ் ஆகிய இரு ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூவைத் திருமணம் செய்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பெங்களூரில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டார்கள். 

கரோனா தடுப்பு விதிமுறைகளால் திருமணத்துக்கு ஒருநாள் முன்பு வரை எப்போது திருமணம் நடக்கும் என்று தெரியாது. தற்போதைய சூழலால் திருமணத் தேதியை அறிவிக்க முடியவில்லை, பலரையும் அழைக்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கோருகிறேன் என இன்ஸ்டகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார் பிரணிதா.  

முழு கட்டுரையைப் படிக்க →