செய்திகள்

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் தெலுங்கு இயக்குநர் வம்சி

விஜய் 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. 

DIN

விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார்.

மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது விஜய் நடிக்கும் 65-வது படம்.

இந்நிலையில் விஜய்யின் 66-வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான தோழா படத்தை இயக்கியவர் பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி. விஜய்யின் 66-வது படத்தை வம்சி இயக்கவுள்ளார். இது பற்றி, தெலுங்கு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் உறுதி செய்துள்ளார். கரோனா ஊரடங்குக்குப் பிறகு இதுபற்றிய செய்தி அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய் - வம்சி இணையும் படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். விஜய் 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. 

2007-ல் முன்னா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வம்சி இதுவரை தோழா உள்பட ஐந்து படங்களை இயக்கியுள்ளார். 2019-ல் மகேஷ் பாபு நடிப்பில் வம்சி இயக்கிய மஹர்ஷி, சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி பல்கலை.கள்!

SCROLL FOR NEXT