செய்திகள்

முதல்வர் முன்னிலையில் பழங்குடி இருளர் நலனுக்காக ரூ. 1 கோடி வழங்கிய சூர்யா !

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடியினர் இருளர் நலனுக்காக ரூ.1 கோடியை நடிகர் சூர்யா வழங்கினார்.  

தினமணி செய்திச் சேவை

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடியினர் இருளர் நலனுக்காக ரூ.1 கோடியை நடிகர் சூர்யா வழங்கினார். 

சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள படம் ஜெய் பீம்.  ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஷ், ரஜிஷா விஜயன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயப் பிரகாஷ்  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப் படம் 1995 ஆம் ஆண்டு முன்னாள் நீதிபதி சந்துரு என்பவரின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் குறித்து இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக பழங்குடி இருளர் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கப்பட்டது.  அதனை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT