செய்திகள்

''அண்ணாத்த' படம் ரூ.500 கோடி வசூலிக்க வேண்டும்'' - இயக்குநர் மிஷ்கின் அதிரடி

அண்ணாத்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் கேட்டுக்கொண்டார். 

DIN

தமிழ் திரைப்பட பத்திரிக்கயாளர் சங்க விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார். அப்போது ரஜினிகாந்த்தின் அண்ணாத்த குறித்து அவர் கூறியிருப்பதாவது, ''ரஜினிகாந்த்தை விட மிகச் சிறந்த நடிகர் இந்த உலகத்தில் இருக்கிறாரா ? நான் தப்புத்தாளங்கள் திரைப்படத்தை 20 முறை பார்த்திருக்கிறேன். 

நான் சினிமாவை அப்படித்தான் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 'குணா'வும், 'மகாநதி'யும் என்னை ஆக்கிரமித்தது. இல்லையென்றால் நான் ரஜினிகாந்த் பக்கம் தான் இருந்திருப்பேன். 4 நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகம் மிரண்டு போனது. அவருடைய சில படங்கள் எனக்கு பிடிக்காது. அவருடைய நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும். அவருடைய பெரிய காதலன் நான். 

அவர் மக்களின் ரசனைக்காக, சிரிப்புக்காக 47 வருடங்களைக் கொடுத்திருக்கிறார். இயற்கை அவரை எப்பொழுதும் காப்பாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இன்னும் அவர் 50 வருடங்கள் இருக்க வேண்டும். அந்த மகாக் கலைஞனை எவ்வளவு நன்றியுடன் நாம் பார்க்க வேண்டும்?. 'அண்ணாத்த' பெரிய வெற்றியடைய வேண்டும்.

நம் குழந்தைகளுடன் 'அண்ணாத்த' போய் பார்க்க வேண்டும். தமிழ் நாடு முழுவதும் அண்ணாத்த படம் குறித்து பேச வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஒரு படம் ஓடினால் எல்லா படமும் ஓடும். அண்ணாத்த ரூ.500 கோடியை வசூலிக்க வேண்டும் என இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

SCROLL FOR NEXT