செய்திகள்

இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

DIN

ராஜராஜ சோழன் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நீலப்புலிகள் அமைப்பின் சாா்பில் 2019 ஜூன் 5-இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பேரரசா் ராஜராஜ சோழனின் வரலாறு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து ராஜராஜ சோழன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி இயக்குநர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய புகாரின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பா. ரஞ்சித் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT