ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘ஜெயில்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இப்படம் சில பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ‘ஜெயில்’ வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் பெற்றது.
இதையும் படிக்க | சூர்யாவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி ஜெயில் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னையை களமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் ஜி.வி பிரகாஷுடன் அபர்நதி , ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.