செய்திகள்

சூர்யாவுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

சூர்யாவுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் சூர்யா தற்போது 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், வினய், சூரி, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாண்டிராஜ் - டி.இமான் கூட்டணியில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதியை நிரந்தரமாக சீா்படுத்தக்கோரி அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் ரூ. 7.85 கோடியில் புதிய பேருந்து நிலையம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விதிமீறல்: 35 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

தில்லியில் இன்று பாதுகாப்பு தளவாட உற்பத்தி வாய்ப்புகள் குறித்த மாநாடு!

SCROLL FOR NEXT