செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் புதிய போட்டியாளர் யார்?

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதலாவது வைட்டு கார்டு போட்டியாளர் இன்று நுழைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

DIN

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதலாவது வைட்டு கார்டு போட்டியாளர் இன்று நுழைவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் தொடரின் 5வது சீசன் தற்போது 46 நாள்களை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து போட்டியாளர்களும் தனித்துவத்துடன் விளையாடி வருவதாக கருத்துகள் நிலவி வருகின்றது.

இந்த சீசனில் சுவாரஸ்யம் குறைவாக உள்ளதாக பரவலான கருத்து நிலவி வந்த நிலையில் தாமரை, நிரூப், வருண், பாவ்னி உள்ளிட்டோர் தங்களின் கருத்துகளால் நிகழ்ச்சியை பரபரப்பில் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இன்று வெளியான முதல் இரண்டு ப்ரோமோவில், ஒரு விளையாட்டில் தாமரை தலையில் இசைவாணியும், இசைவாணி தலையில் தாமரையும் முட்டையை உடைப்பது போன்ற காட்சிகள் வெளியாகின.

மூன்றாவது ப்ரோமோவில் அண்ணாச்சி ஒவ்வொரு பரிசுப் பெட்டியை திறப்பது போன்றும் அப்போது ஒரு பரிசுப் பெட்டியை திறக்கும்போது அதிலிருந்து வைல்ட் கார்டு போட்டியாளர் வெளியே வருகிறார்.

சக போட்டியாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் கூச்சலிடுகின்றனர். ஆனால், அது யார் என்பது ப்ரோமோவில் காட்டவில்லை.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் உள்ளே வந்த வைல்ட் கார்டு போட்டியாளர் முந்தைய சுற்றில் எலிமினேட் ஆகி வெளியே சென்ற அபிஷேக் எனவும் பத்ரி, புதிய கீதை, சாமி 2, மாஸ்டர் உள்ளிட்ட படங்களிலும் மெட்டி ஒலி, திருமதி செல்வம் உள்ளிட்ட நாடகங்களிலும் நடித்த சஞ்சீவ் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT