முகப்பு
செய்திகள்

’உடன் பிறப்பே’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

Updated On : 1 அக்டோபர், 2021 at 4:01 PM
’உடன் பிறப்பே’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
பகிர்:

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’’காற்றின் மொழி’ ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற படங்களைத் தயாரித்த 2டி நிறுவனம் இரா.சரவணன் இயக்கி ஜோதிகா மற்றும் சசிகுமாரை மையமாக வைத்து உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறது.

முழுக்க கிராமப் பின்னணியில் அண்ணன் , தங்கை பாசத்தை வைத்து உருவாக்கபட்ட இப்படத்தில் ஜோதிகாவுடன் சமுத்திரகனி , கலை , சூரி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைத்திருக்கிறார்.

Advertisement

தற்போது இப்படத்தை அக்.14 அன்று அமேசானில் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.