செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலம்: போட்டுடைத்த இயக்குநர் வெங்கட் பிரபு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு மறைமுகமாக அறிவித்துள்ளார். 

DIN


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு மறைமுகமாக அறிவித்துள்ளார். 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் துவங்கப்படவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பவர்கள் குறித்து யூகமாக தகவல்கள் பரவி வருகின்றன. அந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது நாளை (அக்டோபர் 3) தெரிந்துவிடும். 

இந்த நிகழ்ச்சியில் பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகர் அபிஷேக் ராஜா கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''பிறந்தநாள் வாழ்த்துகள் அபிஷேக் ராஜா. அடுத்த 100 நாட்கள் உன்னை நேரில் பார்க்காமல் இருக்க வாழ்த்துகள் . கலக்கு'' என்று குறிப்பிட்டுள்ளார். அவர்  அபிஷேக் ராஜா பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பதை மறைமுகமாக தெரிவிப்பதாக கூறப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரோமோ இன்று வெளியாகி வைரலானது. புரோமோவில் புதிய வீட்டில் இருந்தபடி கமல்ஹாசன் ஆரம்பிக்கலாங்களா? என்று கேட்கிறார். பிக்பாஸ் வீடானது கடந்த முறையை விட மேலும் வண்ணமயமாக இருக்கிறது. மேலும் கமல்ஹாசன் வீட்டு மாடியில் இருந்து பேசுகிறார். அதனால் இந்த முறை போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் மேல் தளத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

SCROLL FOR NEXT