செய்திகள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகாப்பில் தனது சொந்த பாடலுக்கு நடனமாடிய பாக்கியலட்சுமி ஜெனிஃபர்

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற வேடத்தில் நடித்திருந்த ஜெனிஃபர். பார்த்திபன் கனவு பாடலுக்கு மீண்டும் நடனமாடி அசத்தியுள்ளார். 

DIN

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற வேடத்தில் நடித்திருந்த ஜெனிஃபர். பார்த்திபன் கனவு பாடலுக்கு மீண்டும் நடனமாடி அசத்தியுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். இந்தத் தொடரில் ராதிகாவாக நடித்தவர் ஜெனிஃபர். இந்த நிகழ்ச்சியில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 

திடீரென அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால் அதற்கான காரணத்தைக் அவர் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

தனது வளைகாப்பு நிகழ்வில், பார்த்திபன் கனவு படத்தில் தான் நடனமாடிய வாடி மச்சினியே பாடலுக்கு நடனமாடியுள்ளார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமாக இருக்கும் வேளையிலும் அதே நளினத்துடன் நடனமாடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT