செய்திகள்

ஹிந்தியில் ரீமேக்காகும் இயக்குநர் பா.ரஞ்சித் படம்

பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படம் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படம் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் மெட்ராஸ். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். வட சென்னையில் ஒரு சுவரின் காரணமாக இரு தரப்பினரிடையே உருவாகும் பிரச்னையின் அடிப்படையில் சாதிய ஏற்றத் தாழ்வுகளை பதிவு பண்ணியிருப்பார் இயக்குநர் ரஞ்சித். 

நல்ல வெற்றியைப் பதிவு செய்த இந்தப் படம் இயக்குநர் திரையுலக பயணத்தில் முக்கிய மைல்கல்லாக  அமைந்தது. இந்தப் படம் தான் ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் ரஞ்சித்திற்கு பெற்றுத் தந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத வகையில் ஒரு சுவரை வில்லனாக சித்திரித்து சுவாரசியமாக திரைக்கதை அமைத்திருப்பார் ரஞ்சித்.

இந்த நிலையில் மெட்ராஸ் திரைப்படம் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் டிரம்ப்!

அதிமுகவிற்காக வாக்குக் கேட்பேன்! விஜய் நாகரிகமாகப் பேச வேண்டும்! ஓபிஎஸ் பேட்டி

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட டீசர்!

திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!

SCROLL FOR NEXT