முகப்பு
செய்திகள்

ஒரு கோடிப் பார்வையாளர்களைக் கடந்த ‘வலிமை கிளிம்ப்ஸ்’ விடியோ

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
ஒரு கோடிப் பார்வையாளர்களைக் கடந்த ‘வலிமை க்ளிம்ப்ஸ்’ விடியோ
பகிர்:

போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை. 

இரண்டு  வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களின் கொந்தளிப்பிற்கு பின் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வந்தது.  

பின் கடந்த ஆக-2 ஆம் தேதி அப்படத்தின் முதல் பாடலான 'வேற லெவல்' பாடலை  படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். அப்பாடலும் வைரலாகி வந்த நிலையில் கடந்த (செப்-23) அன்று வெளியான வலிமை படத்தின் ’கிளிம்ப்ஸ்’ விடியோ இதுவரை 1 கோடி பேருக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இப்படம் அடுத்த வருடம் (2022) பொங்கல் அன்று திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →