செய்திகள்

இமான் அண்ணாச்சி போல் நடித்துக்காட்டி பிக்பாஸ் வீட்டை கலகலப்பாக்கிய பிரியங்கா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் இமான் அண்ணாச்சி போல் பிரியங்கா நடித்துக்காட்டி அனைவரையும் சிரிக்க வைக்கிறார். 

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் இமான் அண்ணாச்சி போல் பிரியங்கா நடித்துக்காட்டி அனைவரையும் சிரிக்க வைக்கிறார். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கிடையே ஏற்பட்ட சிறு சிறு மோதல்களின் காரணமாக விறுவிறுப்பான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக இன்று (அக்டோபர் 8) வெளியான ப்ரமோவில் தாமரை செல்விக்கும், நமிதா மாரிமுத்துவுக்கும் மோதல் ஏற்படுவது போல் காட்டப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாவது ப்ரமோவில், இமான் அண்ணாச்சி சக போட்டியாளர்கள் போல் நடித்துக்காட்டுகிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவரது குறும்புத்தனத்தை ரசித்து சிரிக்கிறார்கள். அப்போது அங்கு வரும் பிரியங்கா வயிற்றில் துணி அடைத்துக்கொண்டு இமான் அண்ணாச்சி போன்று, ஏலே நீ அண்ணாச்சியா இல்ல நான் அண்ணாச்சியா என கேட்க , இமான் அண்ணாச்சியும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வருகிறார். 

இதனையடுத்து இன்றைய நிகழ்ச்சியில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிரபார்க்கப்படுகிறது. பிரியங்காவும், இமான் அண்ணாச்சியும் தொகுப்பாளர்களாக ஒரு நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லவர்கள். அது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் வெளிப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு22 ஆசிய குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி

ஆசிய கோப்பை கூடைப்பந்து: போராடித் தோற்றது இந்தியா

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT