செய்திகள்

நிலா அது வானத்து மேலே பாடலை பக்தி பாடலாக மாற்றிய இளையராஜா : வெளியான பாடலால் ரசிகர்கள் ஆச்சரியம்

நிலா அது வானத்து மேலே பாடலை பெங்காலி மொழியில் பக்தி பாடலாக வெளியாகி வைரலாகி வருகிறது. 

DIN

நிலா அது வானத்து மேலே பாடலை பெங்காலி மொழியில் பக்தி பாடலாக வெளியாகி வைரலாகி வருகிறது. 

மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்தில் இடம் பெற்ற நிலா அது வானத்து மேலே பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடல் இன்றைய தலைமுறையினரும் ரசிக்கக் கூடிய பாடலாக இருந்து வருகிறது. 

இந்தப் பாடலின் பின்னணி குறித்து ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடல் சூழ்நிலைக்காக இளையாராஜாவால் உருவாக்கப்பட்ட இசை தான் நிலா அது வானத்து மேலே பாடல்.

ஆனால் மணிரத்னத்துக்கு இசை பிடித்திருந்தாலும் அந்த சூழ்நிலைக்கு அந்தப் பாடல் பொருத்தமாக இல்லாதது போல் தோன்றியிருக்கிறது. அப்போது  தென்பாண்டி சீமையிலே பாடலுக்கான இசை இளையராஜாவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் நிலா அது வானத்து மேல இசையையும் நன்றாக நடனமாடக் கூடிய பாடலாக உருவாக்கி தருமாறு இளையராஜாவை கேட்டிருக்கிறார் மணிரத்னம். அப்படி உருவானது தான் நிலா அது வானத்து மேலே பாடல். இந்த நிலையில் இந்தப் பாடலின் இசையைக் கொண்டு பெங்காலி மொழியில் நவராத்திரி சிறப்பாக பக்தி பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை உஷா உதுப் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது வைரலாகி வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT