முகப்பு
செய்திகள்

’விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்

தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2021 at 6:04 PM
’விக்ரம் வேதா’ ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடக்கம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதோடு வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. 

பின் அப்படம் சில மொழிகளில் ரீமேக் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஹிந்தியில் தயாராக உள்ள’விக்ரம் வேதா’திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஹிந்தியிலும் ‘விக்ரம் வேதா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் புஷ்கர்-காயத்திரி இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும் மாதவன் கதாப்பாத்திரத்தில் சயிப் அலிகானும் நடிக்க இருக்கிறார்கள். 

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.