’உண்மையை உரக்க சொன்னால்...': நடிகர் சூர்யா டிவிட் 
செய்திகள்

’உண்மையை உரக்க சொன்னால்...': நடிகர் சூர்யா கருத்து

ஜெய் பீம் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் என நடிகர் சூர்யா டிவீட் செய்துள்ளார்.

DIN

ஜெய் பீம் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் என நடிகர் சூர்யா டிவீட் செய்துள்ளார்.

நடிகர் சூர்யா பல்வேறு சமூகக் கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். குறிப்பாக நீட் தேர்வு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்து சமூகத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல்நீதியாக அந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.

கரோனா தொற்று பரவல் காலத்தில் நீட் தேர்வை நடத்துவது தொடர்பான நீதிமன்ற உத்தரவிற்கு நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து பரவலாக விவாதப் பொருளானது. திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவிற்கு நடிகர் சூர்யா தெரிவித்த எதிர்ப்பிற்கு மத்தியில் ஆளும் பாஜக தரப்பு கடும்கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தில் பழங்குடியின பெண்ணின் பிரச்னைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ள சூர்யா வெள்ளிக்கிழமை அத்திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்.

அத்துடன் தனது சுட்டுரைப்பதிவில் பதிவிட்டுள்ள அவர் உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் மகிழ்விப்பதை காட்டிலும், உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவை தரும் ஜெய்பீம் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

ஜெய்பீம் திரைப்படத்தின் டீசர் ரசிகர்களின் வெகுவான ஆதரவைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

புகையிலா போகி: திருவள்ளூா் ஆட்சியா் வேண்டுகோள்

திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாளை பொங்கல் விழா

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT