செய்திகள்

''திருடன்கள் இல்லாத சாதி இருக்கா ?'' - வெளியானது சூர்யாவின் 'ஜெய் பீம்' பட டீசர் !

சூர்யாவின் ஜெய் பீம் பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

DIN

சூர்யாவின் ஜெய் பீம் பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஜெய் பீம், ஓ மை டாக் ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டன. 

அதன் படி ஆகஸ்ட் மாதம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து நேற்று (அக்டோபர் 14) ஆம் தேதி சசிக்குமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதிஷ் ஆகியோர் நடிப்பில் உருவான உடன் பிறப்பே திரைப்படம் வெளியாகி நல்ல விமரிசனங்களைப் பெற்று வருகிறது. 

இந்த நிலையில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  

பழங்குடியின பெண்ணின் பிரச்னைக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார். டீசரின் இறுதியில், இந்தக் சாதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்படுவது சகஜம் சார் என்று ஒருவர் சொல்ல அதற்கு பதிலளிக்கும் சூர்யா, திருடன்கள்  இல்லாத சாதி இருக்கா நடராஜ் ? உங்கள் சாதி என் சாதி என எல்லா சாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என பதில் கூறுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT