செய்திகள்

'நெஞ்சுக்கு நீதி' : உதயநிதி ஸ்டாலின் - அருண்ராஜா காமராஜ் படத்தின் மோசன் போஸ்டர் இதோ

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

DIN

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் , ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் 'நெஞ்சுக்கு நீதி'.  இந்தப் படத்தை கனா பட இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். 

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியாகி பாராட்டுக்களையும் வசூலையும் வாரிக்குவித்த படம் 'ஆர்டிக்கிள் 15'. நம் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலையை இந்தப் படம் பேசியிருந்தது. இந்தப் படத்தின் தமிழ் பதிப்புதான் நெஞ்சுக்கு நீதி திரைப்படம். 

இந்தப் படத்தில் ஆரி, தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன் அப்துல் லீ, ராட்சசன் சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். தமிழரசன் பிச்சமுத்து இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். இந்த மோசன் போஸ்டரானது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT