’குருப்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு 
செய்திகள்

’குருப்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான குருப் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்திருக்கிறது.

DIN

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான குருப் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்திருக்கிறது.

நடிகர் துல்கர் சல்மான் தமிழ் , மலையாளப் மொழிகளில் மிக கவனமாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். கடைசியாக அவர் நடித்து தமிழில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் அடுத்த படமாக ‘குருப்’ திரையரங்குகளில் வரும் நவம்பர்-12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கேரளாவில் புகழ்பெற்ற குற்றாளிகளில் ஒருவரான சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டட்டிருக்கிறது.

துல்கர் தயாரித்த இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி!

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலி!

ராமேசுவரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது!

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

SCROLL FOR NEXT