செய்திகள்

''சமந்தா எனக்கு பேத்தி மாதிரி...'' - வழக்கு தொடர்ந்த சமந்தாவுக்கு பிரபல மருத்துவர் விளக்கம்

சமந்தாவின் குற்றச்சாட்டுக்கு பிரபல மருத்துவர் விளக்கமளித்துள்ளார். 

DIN

சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்தவுடன் அவர்களது பிரிவுக்கான காரணம் என பல்வேறு வதந்திகள் பரவத் துவங்கியது. சமந்தாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், அவர் குழந்தைப் பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என சில யூடியூப் பக்கங்கள் செய்திகள் பகிர்ந்தன.

அதே போல நாக சைதன்யா தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவது சமந்தாவுக்கு பிடிக்கவில்லை என்றும் அதனாலேயே இருவரும் பிரிவதாகவும் கூறப்பட்டது. இந்த வதந்திகள் குறித்து பதிலளத்த சமந்தா, விவாகரத்து என்பது வலி நிறைந்தது. அதில் இருந்து மீண்டு வர அனுமதியுங்கள். எந்த விதமான வதந்திகளும் என்னை காயப்படுத்த முடியாது என்று உறுதியாக தெரிவித்தார். 

இருப்பினும் அவரைப் பற்றிய வதந்திகள் குறையவில்லை. மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த மூத்த மருத்துவர் சி.எல். வெங்கட் ராவ் என்பவர் சமந்தாவின் தவறான தொடர்புதான் அவரது விவாகரத்துக்கு காரணம் என பகீர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இது சமந்தா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இதனையடுத்து தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பகிர்ந்த யூடியூப் சேனல்கள் மீதும், வெங்கட் ராவ் மீதும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த நிலையில் இதுகுறித்து பதிலளித்த மருத்துவர் வெங்கட் ராவ், சமந்தா எனது பேத்தி போன்றவர். அவருக்கு நீதி கிடைக்க நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். சமந்தா குறித்து நான் சொன்ன கருத்துக்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அவ்வாறு பேசினேன் என்று விளக்கமளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைக்கு இன்று இடைவேளை! நாளை மீண்டும் தொடங்கும்!

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

SCROLL FOR NEXT