செய்திகள்

''பிக்பாஸில் இருந்து வெளியேறியதற்கு காரணம் இதுதான், நான் இப்படித்தான் இருப்பேன்'': அபிஷேக்கின் கருத்து வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து அபிஷேக் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். 

DIN

சினிமா விமர்சனங்கள் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் அபிஷேக் ராஜா. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். துவக்கத்தில் இருந்தே அவரது நடவடிக்கைகள் விமரிசிக்கப்பட்டன. குறிப்பாக மற்ற போட்டியாளர்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. 

இருப்பினும் அவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பேசுபொருளாக இருந்து வந்தார். ஏதோவொரு வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக செல்வதற்கு உதவினார். இதன் காரணமாக அவர் நீண்ட நாட்கள் நீடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறினார். 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் குறித்து அபிஷேக் ராஜா விளக்கம்ளித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், பிக்பாஸ் ஒரு விளையாட்டு. நான் விதிமுறைப்படியே விளையாடினேன். நான் டாஸ்க்கின் போது மற்ற போட்டியாளர்களுடன் அவர்களின் போட்டித் திறனை தூண்டும் வகையில் விளையாடினேன். அது போட்டிகளின் போது தான். மற்ற நேரங்களில் போட்டியாளர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தேன்.

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் நானாக இருந்த திருப்தியுடன் இருந்த திருப்தியுடன் வெளியேறியிருக்கறேன். உண்மையாக இருப்பது தான் என் நிலைப்பாடு. நான் இப்படித்தான் நிகழ்ச்சியிலும் இருந்தேன். என் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT