செய்திகள்

மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் இயக்குநர் ஷங்கர்: கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் புகார்

இயக்குநர் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தின் கதை தன்னுடையது என கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 

DIN

இயக்குநர் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தின் கதை தன்னுடையது என கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். 

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

தில் ராஜூ இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதுகிறார். இந்த நிலையில் செல்லமுத்து என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தின் கதை தன்னுடையது என்று புகார் அளித்துள்ளார். 

இவர் கார்த்திக் சுப்பராஜின் முன்னாள் உதவி இயக்குநர் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்துக்கு கதை எழுதுவதால், அவர் மீது செல்ல முத்து இந்த புகார் அளித்துள்ளாரா? அல்லது ஷங்கர் மீது புகார் அளித்துள்ளாரா? என்பது தெரியவில்லை. 'சர்கார்' பட விவகாரத்தில் நியாயமான முடிவெடுத்த இயக்குநர் பாக்யராஜ், இந்த விவகாரத்தையும் நியாயமான முறையில் விசாரித்து தீர்வு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT