'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை.
போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இருவரும் இணைத்திருக்கும் திரைப்படம் வலிமை. இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களின் கொந்தளிப்பிற்கு பின் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்றதுடன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வந்தது.
இதையும் படிக்க | ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
பின் கடந்த ஆக-2 ஆம் தேதி அப்படத்தின் முதல் பாடலான 'வேற லெவல்' பாடலை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். வெளியானதிலிருந்து தற்போது வரை 2 கோடி பார்வையாளர்களைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று (செப்-2) வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவைடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தாண்டு தீபாவளி அன்று படத்தை திரையரங்கில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது .