செய்திகள்

திரைப்பட பாடலாசிரியர் புலமைப்பித்தனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

திரைப்பட பாடலாசிரியர் புலமைப்பித்தனுக்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுவதாக மருத்துமனை அறிக்கைவெளியிட்டுள்ளது.

DIN

திரைப்பட பாடலாசிரியர் புலமைப்பித்தனுக்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுவதாக மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எம்ஜிஆருக்காக பல புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர் புலமைப்பித்தன். எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிகக் வாழ்ந்திடாதே என்ற பாடல் மிகப் பிரபலம்.

மேலும், 'நான் யார்', 'ஓடி ஓடி உழைக்கணும்', 'ஆயிரம் நிலவே வா' என்ற எண்ணற்ற பாடல்களை அவர் எழுதியுள்ளார். வடிவேலு கதாநாயகனாக நடித்த 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' படத்திலும் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த நிலையில் பாடலாசிரியர் புலமைப்பித்தன் கடந்த மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ''உயிர் காக்கும் கருவியின் துணையுடன் கவிஞர் புலமைப்பித்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம்!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்! கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் புனரமைக்கும் பணி! வெள்ளநீர் இனி விரைந்து செல்லும்!

சிறுமி பாலியல் வன்கொடுமை... பிரபல மலையாள நடிகை கைது!

SCROLL FOR NEXT